ETV Bharat / state

மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைக்க அரசு பரிசீலிக்க உத்தரவு - மங்கல இசைக்கு தனிவாரியம்

சென்னை: மங்கல இசை கலைகளைப் பாதுகாக்க அதற்கென தனி வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்  மங்கல இசைக்கலைஞர்கள்  சென்னை செய்திகள்  மங்கல இசைக்கு தனிவாரியம்  board for traditional musician
மங்கல இசைக்கலைஞர்களுக்கு தனிவாரியம் அமைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
author img

By

Published : Sep 1, 2020, 4:04 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட நாதஸ்வர, தவில், மங்கல இசைக்கலைஞர்கள், தெருக்கூத்து சங்கங்கத்தினர் நிவாரணம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நலவாரியத்தில் பதிவு செய்யாத நாட்டுப்புறக் கலைஞர்கள் தற்போது நிவாரணம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பங்களை பரிசீலித்து அவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் எனவும் உறுதியளித்தார். மேலும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வயலின் வாய்ப்பாட்டு, மிருதங்கம் உள்ளிட்ட கலைஞர்களையும் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கும் கலைஞர்களுக்கு 6 வாரங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாரம்பரியமான மங்கல இசைக் கலைகளைப் பாதுகாக்க மங்கல இசைக் கலைஞர்களுக்கு தனிவாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: டிஜிட்டல் கையெழுத்து தொடர்பான வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.