ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6வது முறையாக நீட்டிப்பு! - Chennai High Court

Senthil Balaji Judicial Custody: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
senthil balaji
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 6:51 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், வழக்கு மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓசூரில் ஏர் கம்ப்ரசர் வெடித்து விபத்து; கை-கால்கள் முறிந்த நிலையில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.