ETV Bharat / state

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை! - today latest news in chennai

Senthil Balaji bail Petition: அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Senthil Balaji bail Petition
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 8:35 AM IST

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றம் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றம் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு முதன்மை நீதிபதி அல்லி முன்பு இன்று (செப். 11) விசாரனைக்கு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு 123வது வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும், கைதான சமயத்தில் ஏற்கனவே ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அல்லி அனுமதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்பெயின் உலக இரும்பு மனிதன் போட்டிக்கு ஸ்ட்ராங் மேன் கண்ணன் தேர்வு.. அரசு சார்பில் உதவி கிடைக்காததால் வேதனை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.