ETV Bharat / state

“இலாகா இல்லாத அமைச்சர்” ஆனார் செந்தில் பாலாஜி - அரசு இணையதளத்தில் வெளியீடு - minister without portfolio

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு இருந்த நிலையில், அரசின் இணையதளத்தில், அமைச்சரவை பட்டியலில், செந்தில் பாலாஜிக்கு, துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை

senthil balaji as a minister without a portfolio government announced in website
“இலாகா இல்லாத அமைச்சர்” ஆனார் செந்தில் பாலாஜி - அரசு இணையதளத்தில் வெளியீடு
author img

By

Published : Jun 20, 2023, 4:09 PM IST

சென்னை: கடந்த 2011முதல் 2016ஆம் ஆண்டு வரையிலாnஅ அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரும் எழுந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து ஆதாரங்களைத் திரட்டியது.

இந்நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை அன்று இரவே அவரைக் கைது செய்தது. அதைத்தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் சிகிச்சைக்காக, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துவரும் செந்தில் பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், அவரிடம் இருக்கும் துறைகள் வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற கேள்வி எழுந்தநிலையில், இலாகா மாற்றம் தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், முதல்வரின் கடிதம் 'Mislead and Incorrect' ஆக இருப்பதாகக் கூறி, ஆளுநர் ரவி திருப்பியனுப்பினார்.

தொடர்ந்து ஆளுநரின் கடித்திற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கடிதமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது’ எனக் கூறி முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துள்ளார். அதேநேரத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்குக் கூடுதல் துறை ஒதுக்கப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூத்த அமைச்சர் என்ற 21 வரிசையில் செந்தில் பாலாஜிக்கு இலக்கா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலாகா இல்லாமல் பதவியில் நீடித்த தலைவர்கள்

அசாதாரணமான சூழல்களிலும், அமைச்சர் அல்லது முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமயங்களிலும் இலாகாக்கள் மாற்றிக்கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன.

1984-85 ஆம் ஆண்டில், தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் நிர்வகித்த துறைகளை அப்போதைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று அப்போதைய ஆளுநர் குரானா அறிவித்தார்.

2011-ம் ஆண்டு கால்நடை அமைச்சரான கருப்பசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அவரது இலாகா மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக கருப்பசாமி நீடித்தார்.

2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன் 2015ம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். அவர் வசமிருந்த இந்து சமய அறநிலையத்துறை, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது துறைகளை நிதிஅமைச்சர் ஓபன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் அறிவித்தார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 166 உட்கூறு 3-ன் படி இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு " - கிருஷ்ணசாமி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.