ETV Bharat / state

மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை..! பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் உள்பட மூவர் கைது! - குற்றச் செய்திகள்

மனைவியின் சிகிச்சை செலவிற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர் உள்பட மூன்று பேரை செம்மஞ்சேரி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Semmancheri police arrested three people including a youth who stole a bike for his wife treatment
பைக் திருடிய மூவர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 6:50 PM IST

பைக் திருடிய மூவர் கைது

சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7ஆவது அவென்யுவில் வசித்து வந்த 24 வயதான அருண்குமார் என்ற இளைஞர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் சேலஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற அருண்குமார், வீட்டின் கீழ் அவரது விலை உயர்ந்த KTM பைக்கை நிறுத்திவிட்டு உறங்க சென்றுள்ளார்.

மறுநாள் 17ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் தூக்கம் கலைய வெளியே வந்த அருண்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டின் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காததால் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகனிடம் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகன திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கே.கே.சாலையில் நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு வாகன பதிவு எண் இல்லாமல் மூன்று நபர்கள் அதிக வேகத்தில் சென்றதைக் கண்ட தனிப்படை காவல் துறையினர் அவர்களை மடக்கி விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் வாகன பதிவு எண்ணை கூறும்படி காவல் துறையினர் கேட்ட பின்பு, பதிவு எண் அவர்களில் யாருக்கும் தெரியாமல் முழித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், வாகனத்தின் RC புக் கேட்டுள்ளனர். அதையும் இல்லை என்று கூறியதால் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூவரும் வந்த யமஹா R15 வாகனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளவரசன், 24 வயதான யாழின்ராஜ், சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான அசோக் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இளவரசன் மீது திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, வீடு உடைப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்று வந்ததும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி துறையூரைச் சேர்ந்த யாழின்ராஜ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு பெண்ணை கடத்திய வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12ம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த இளவரசன், யாழின்ராஜ் இருவரும் சிறையில் இருக்கும்போது, உடன் சிறையில் இருந்த சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக்வுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில் அசோக் சென்னையில் திருடும் பைக்குகளை திருச்சிக்கு எடுத்து சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துவிட்டு அவர்களிடம் சுமார் 8000 வாங்கி கொண்டு வருவதை வாடிக்கையாக வைதுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. துறையூர் காவல் நிலையத்தில் இருவரும் அதிகளவு குற்றச்சம்பத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு கட்டத்தில் காவல் துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

காவல் துறையினர் எச்சரித்ததை தொடர்ந்து யாழின்ராஜ், இளவரசனுடன் இருவரும் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். யாழின்ராஜ் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதை சரி செய்ய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் பழைய திருட்டு தொழிலில் மீண்டும் ஈடுபட்டு எப்படியாவது மனைவியின் நோயை குணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அவ்வப்போது புது புது வாகனங்களை திருடி வந்து திருச்சியில் கொடுத்து பணம் பெற்று செல்லும் சிறையில் பூத்த நட்பை செல்போனில் தொடர்பு கொண்டு, மனைவி சிகிச்சை குறித்து கூற தாராள பிரபு வாரி வழங்குவதில் கர்ணர் போல சென்னைக்கு வாங்க அதிக வாகனம் இருக்கு எடுத்து தரேன் என்று செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அசோக் கூற, சிறை நண்பனை நம்பி சென்னைக்கு வந்துள்ளார்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த நண்பர்களுக்கு கஞ்சா வாங்குவதற்காக சென்னை மணலி புதுநகர்-க்கு அழைத்துச் சென்றுள்ளார். கஞ்சா வாங்கிய மூவரும் அங்கிருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு திரும்புதற்காக அந்த பகுதியில் இருந்து விலை உயர்ந்த R15 பைக்கை திருடியுள்ளனர்.

திருடிய பைக்கை சொந்த பைக் போன்று பயன்படுத்தி அதில் சென்று எங்கெல்லாம் மாட்டிகொல்லாமல் பைக் திருட முடியும் என நோட்டுமிட்டுள்ளனர். பைக் திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிய அசோக் வீட்டின் அருகில் குடியிருப்பு பகுதியில் கீழ் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த KTM பைக்கை கடந்த 16-ஆம் தேதி திருடி சோழிங்கநல்லூர் ஏரிக்கரை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மணலியில் திருடிய பைக்கை வைத்து மேலும் பல பைக்குகள் திருட நோட்டமிட்டபோது தான் காவல் துறையினரிடம் மூவரும் சிக்கிக் கொண்டுள்ளனர். சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய பைக்குகளை திருடி அதை வெறும் 8ஆயிரம் முதல் 10ஆயிரம் வரையில் விற்று அதில் வரும் பணத்தில் கஞ்சா, பெண்கள் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து வாகனம் திருடும் கும்பலை சாதுர்யமாக கைது செய்து சிறையில் அடைத்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் பாராட்டினர்.

இதையும் படிங்க: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்த சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய ஆர்.பி.வி.எஸ்.மணியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.