இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பொதுமக்களுக்கான மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இக்கூட்டத்தில் மருத்துவம் தொடர்பான உண்மையான, அதிகாரப்பூர்வமான தகவல்கள், புள்ளி விவரங்கள், புதிய, நவீன சிகிச்சைகள், மருந்துகள் குறித்து தகவல்கள் அளிக்கப்படுவதினால் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவடைகின்றனர்.
பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 3 மணியளவில் பல்கலைகழக செனட் கூட்டரங்கில் ,சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல நிறுவனத்தின் மருத்துவர் சீனிவாசன் கரோனா வைரஸ் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்தக் கருத்தரங்கில் கரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள், தன்மை, அதன் பாதிப்புகள், மருத்துவ முறைகள், தடுப்பு முறைகள் குறித்து உரையாற்றுகிறார். இக்கூட்டத்திற்கு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையேற்கவுள்ளார்.
மேலும் இக்கருத்தரங்கத்தின் மூலம் கரோனா வைரஸின் தாக்கங்களைப் பற்றி பொதுமக்களும் மாணவர்களும் அறிந்து கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பா? - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி