ETV Bharat / state

"நிறுத்தி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்றே வெளியீடு" - அண்ணா பல்கலை! - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்றே வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா
அண்ணா
author img

By

Published : Mar 14, 2023, 7:22 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டுத்துறை நடத்தி வருகிறது. இதில், தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் தொகை குறித்த செலவு கணக்கினை பல கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிகிறது. அதேபோல், மாணவர்களிடம் வசூலித்த தேர்வு கட்டணத்தையும் சில கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் செலுத்தாதவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்தக் கல்லூரிகளின் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத தனியார் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான 3, 5 மற்றும் 7வது செமஸ்டர் தேர்வு நேற்று (மார்ச்.13) வெளியிடப்பட்டது. இதில், மாணவர்களின் தேர்வு கட்டணம், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கும் தொகை குறித்த செலவு கணக்கு உள்ளிட்டவற்றை முறையாக அளிக்காத கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகளின் பருவத் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து ஒத்துழைப்பு அளிக்காதது, ஏற்கெனவே நான்கு பருவத் தேர்வுகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட முன் பணத்துக்கு சரியாக கணக்கு தராதது ஆகிய காரணங்களால் 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை இன்றே வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியிடப்படும். கல்லூரிகள் செய்த தவறுக்கு அக்கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சம்மந்தப்பட்ட 18 கல்லூரிகளின் நிர்வாகிகளும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பேராசிரியர்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளதாகவும், 9 கல்லூரிகள் கணக்கை ஒப்படைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்க முடிவு" - சென்னை ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.