சென்னை : கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு (Study leave) ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“இதனைப் பயன்படுத்தி நன்றாகப் படித்து நேரடித் தேர்வு எழுத தயாராகிக் கொள்ள வேண்டும். ஆன்லைன் தேர்வு முறை தரமானதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். நேரடித் தேர்வு முறைதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நன்றாக இருக்கும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 21 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகளை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தேர்வை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள்- ஸ்டாலின் நாளை ஆலோசனை