தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ஜூலை 10ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைச்சர் செல்லூர் ராஜூ கரோனா தொற்று பரிசோதனைக்காக ஜூலை 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜூலை 10ஆம் தேதி தொற்று உறுதிசெய்யப்பட்டது. இன்று (ஜூலை 17) அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (ஜூலை 18) முதல் அவர் பணிகளை மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, நிலோபர் கபில், ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் ஆகியோர் கரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - முழு விசாரணைக்குப் பிறகே இ-பாஸ்!