ETV Bharat / state

கஞ்சா விற்கும் பட்டதாரி இளைஞர்கள் : தாம்பரம் காவல் ஆணையர் அதிர்ச்சித் தகவல் - Selling Cannabis

சென்னை தனியார் கல்லூரியில் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு உரையாடல் நடத்தினார்.

இரண்டு ஆண்டில் 182 பேர் கஞ்சா விற்பனையில் கைது- தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல்.

author img

By

Published : Aug 18, 2023, 7:33 PM IST

இரண்டு ஆண்டில் 182 பேர் கஞ்சா விற்பனையில் கைது- தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல்.

சென்னை: தாம்பரம் மாநகர பகுதியில் படித்த பட்டதாரி இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் 182 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பங்கு பெற்றார்.மேலும் காவல்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான அவசியங்கள் குறித்தும் விழிப்புணர்வை நடத்தினர்.

பின்னர் மாணவர்களிடையே காவல் ஆணையர் அமல்ராஜ் பேசியதாவது, தாம்பரம் மாநகர காவல் ஆணையத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக மட்டும் 18 வயதில் இருந்து இருந்து 20 வயதிற்கு உட்பட்ட 182 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் விற்பவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து மட்டுமே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "கருக்கலைப்பில் மைனர் பெண்ணின் தந்தை பெயர் அவசியமில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேலும் பீகாரில் இருந்து தனியார் கல்லூரிக்கு படிக்க வந்த மாணவன் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறிய பிசினஸ் போன்று கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஏதோ ஒரு வகையில் இந்த போதைப் பொருளானது நமது வாழ்க்கையை பாதிக்கிறது. இதனால் இந்த போதை பழக்கதில் இருந்து மாணவர்களை நல்வழியில் கொண்டு வருவதற்காக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை சார்பில் மாணவர்களிடையே நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். அதனை தொடர்ந்து போதை பொருளுக்கும், போதை பழக்கத்திற்கும் எதிராக உறுதிமொழியை கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: இடுக்கியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை - வேலை நிறுத்த போராட்டத்தால் வெறிச்சோடிய கேரளா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.