சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளுக்கு நபர் ஒருவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை வஸ்துகளைத் தொடர்ந்து விற்பனை செய்துவருவதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) வழக்கம்போல் சங்கர் நகர்ப் பகுதியில் உள்ள கடைகளுக்கு அந்த நபர் குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்யவந்துள்ளார். அந்த நபரை காவல் துறையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் அந்த நபர் குரோம்பேட்டை ரங்கா நகர் மூன்றாவது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று உள்ளார். அப்போது உள்ளே சென்ற காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் கோபி (37) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரின் படுக்கையறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 230 கிலோ குட்கா பான்மசாலா போன்ற போதை வஸ்துகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையடுத்து அவரை கைதுசெய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குட்கா பான்மசாலா பறிமுதல்: ஒருவர் கைது - தடை செய்யப்பட்ட பான்மசாலா பறிமுதல்
சென்னை: சங்கர் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 230 கிலோ குட்கா, பான் மசாலா பொருள் பறிமுதல்செய்யப்பட்டது.