ETV Bharat / state

துபாயில் இருந்து கடத்தி வந்த 2.7 கிலோ தங்கப் பசை பறிமுதல் - விமான நிலைய ஊழியர் சிக்கியது எப்படி? - Customs officials

Seized smuggling gold an airport: துபாயில் இருந்து சென்னை வந்த தனியார் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.6 கோடி மதிப்புடைய 2.7 கிலோ தங்கப் பசையை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Seized smuggling gold an airport
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.7 கிலோ தங்கப் பசை பறிமுதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:32 AM IST

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (அக்.18) அதிகாலை, வழக்கம்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் உள்ள டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்குள் சென்ற, விமான நிலையத்தில் உள்ள தனியார் உணவு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் மணிவண்ணன் (30), நீண்ட நேரம் கழித்து வெளியே வந்துள்ளார்.

இதை கண்காணித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சந்தேகத்தில், அந்த ஒப்பந்த ஊழியர் மணிவண்ணனை பின் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். அதன் பின்னர் மணிவண்ணன் விமான நிலையத்தை விட்டு, அவசரமாக வெளியே செல்ல முயன்றுள்ளார். உடனே கேட்டில் அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், விமான நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்துள்ளனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் ஒரு பார்சல் இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதற்குள் முட்டை வடிவில் 8 பிளாஸ்டிக் பவுச்கள் இருந்துள்ளன.

அதைத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்கப்பசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், மணிவண்ணனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதோடு விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அதன் பின்பு மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த 2 டிராண்சிட் பயணிகள், துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று அதிகாலை 1 மணிக்கு, கடத்தி வந்த தங்கப்பசை அடங்கிய பார்சலை, கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வந்துள்ளனர். பின் அதே கழிவறைக்குள் ஒப்பந்த ஊழியர் மணிவண்ணன் சென்று, அந்தத் தங்கப்பசை பார்சலை எடுத்து, தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து, வெளியில் சென்று கடத்தல் ஆசாமிகளிடம் கொடுக்க வேண்டும்.

இதுவே இவர்களது திட்டம் என தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ரிபாஸ் (38), முகமது இன்சமாம் (35) ஆகிய இருவரையும் சென்னை விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்தனர். அதோடு, அவர்கள் வைத்திருந்த கடத்தல் தங்கப் பசையையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த தங்கப்பசை சுமார் 2.744 கிலோ இருந்துள்ளது. அதாவது அதன் சர்வதேச மதிப்பு இந்திய பணத்தில் ரூ.1.6 கோடி ஆகும். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பிடிபட்ட ஒப்பந்த ஊழியர், இலங்கை கடத்தல் ஆசாமிகள் 2 பேர் என மூவரையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "இந்தியா கூட்டணியில் யார் யார் பிரதமர் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.