தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் உள்ள பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தனது அதிருப்தியை வெளிபடுத்தினார். மேலும், சோதனையில் சிக்கிய வேட்பாளரை மட்டும் நீக்கியிருக்க வேண்டும் எனவும், ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும் சீமான் கூறினார்.