ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதனை இதுவரை தடைசெய்யாது காலம் கடத்திவருவதாக சீமான் தெரிவித்த நிலையில், இணையவழி சூதாட்டம் தமிழ்நாட்டில் முழுமையாகத் தடைசெய்யப்படும் என ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய
author img

By

Published : Jan 6, 2022, 2:56 PM IST

Updated : Jan 6, 2022, 3:13 PM IST

சென்னை: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனப் பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் காரணமாகப் பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகி தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர். சமீப நாள்களாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அதனால் பல மாநில அரசுகள் அதனைத் தடைசெய்ய மசோதா நிறைவேற்றிவருகின்றன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில் இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை

குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  • குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும்!https://t.co/10RhhymVUt@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/VaLLNRtubG

    — சீமான் (@SeemanOfficial) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் மீண்டும் இணையவழி சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துவருவது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று அறிவித்த திமுக அரசு, இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது.

இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலக்கிலிருந்து, இளைய தலைமுறையினரை மடைமாற்றுவது என்பதும் வலிமிகுந்த உண்மையாகும். மேலும், இளைஞர்களின் நற்சிந்தனையை முற்று முழுதாகச் சிதைப்பதோடு, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் நல்வாழ்வினையே பாழ்படுத்திவிடுகிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இதனை உணர்ந்தே நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழிச் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இணையவழி சூதாட்ட கும்பல்கள் நீதிமன்றம் மூலம் தடைநீக்கம் பெற்றன. இருப்பினும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசிற்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய

தற்போது, தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவும் விரைவில் முடிவடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இணையவழி சூதாட்டங்களை இதுவரை தடைசெய்யாது காலம் கடத்திவரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய

ஆகவே, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, இனியாவது இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்ய, வலுவான தடைச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Online Gambling: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும்.. ஸ்டாலின் உறுதி...

Last Updated : Jan 6, 2022, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.