ETV Bharat / state

'சீமான் பேசியது அநாகரீகமான ஒன்று' - கனிமொழி கருத்து

சென்னை: ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

mp-kanimozhi
author img

By

Published : Oct 19, 2019, 12:19 PM IST

சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து அநாகரீகமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. அவர் கூறும் கருத்துக்கள் ஆதாரமற்றவை, அவரிடம் ஆதாரமிருந்தால் அதை நிரூபிக்கட்டும்.

முரசொலி அலுவலகம் எப்படி உருவாக்கப்பட்டது, எப்போது உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றி மக்கள் அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் கூறியதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை' என்று தெரிவித்தார்.

மேலும் படிங்க: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்: வைகோ குற்றச்சாட்டு

Intro:தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் தலைமையில் ஆன பாராளுமன்ற உறுப்பினர்கள் செர்பியாவில் நடைபெற்ற உலகப் பாராளமன்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்விற்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது அந்த வாய்ப்பை எனக்கு அளித்த சபாநாயகருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

ராஜீவ்காந்தி கொலை குறித்தி சீமான் பேசிய கருத்துக்கு

இப்படிப்பட்ட கருத்துக்களை பேசுவது அனகாரிகமான ஒன்று என கூறினார்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கு

இதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொல்லக்கூடிய ஆதாரமற்ற விஷயங்கள் அவரிடம் ஆதாரம் இருந்தால் அதை நிரூபிக்கட்டும் அதைப் பற்றி பேசட்டும் என தெரிவித்தார்

முரசொலி அலுவலகம் எப்படி உருவாக்கப்பட்டது எப்போது உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் ராமதாஸ் கூறியதற்கு நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் கூட தேவையில்லை மக்கள் அனைவருக்கும் உண்மை தெரியும் என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.