ETV Bharat / state

மதுரை தீ விபத்து: உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க சீமான் கோரிக்கை - seeman request govt for firefighters family funds

மதுரை : துணிக்கடை தீ விபத்து மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman
seeman
author img

By

Published : Nov 16, 2020, 10:43 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் “இரண்டு நாள்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள துணிக்கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், முன்கள வீரர்களாகத் தீயை அணைக்கப் போராடியபோது சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டு தீயணைப்பு வீரர்களும் விபத்தில் சிக்குண்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர் எனும் செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இவ்விபத்தில் சிக்குண்டு பலத்தக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் சின்னக்கருப்பு, கல்யாணக்குமார் ஆகிய இருவரும் விரைந்து குணமடைந்து மீண்டு வரவேண்டும். அதிகப்படியான பாதுகாப்பு குறைபாடுகள், தரமற்றப் பாதுகாப்பு உபகரணங்கள், மிதமிஞ்சிய பணிச்சுமை, வயதுக்கு மீறிய பணி போன்றவைகளே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முழுமுதல் காரணங்களாகின்றன. இதனால், இந்த ஆண்டில் மட்டும் மூன்று தீயணைப்பு வீரரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வகை உயிரிழப்புகள் இனி ஒருபோதும் தொடர்ந்திராத வண்ணம் முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தீயணைப்பு வீரர்களின் உயிர்காக்க தகுந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்திட வேண்டும்.

எவ்வளவு நிதியளித்தாலும் அது ஓர் உயிருக்கு ஈடாகாதெனினும், பொதுமக்களின் நல்வாழ்விற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தங்கள் உயிரையே ஈகம் செய்யத் துணிந்து தன்னலமற்று, அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றும் காவல், ராணுவம், மருத்துவம், தூய்மைப் பொறியாளர்கள், பேரிடர் மீட்புப் படையினருக்கு உயிரிழப்பின்போது அரசு வழங்கும் நிதியுதவியானது அவர்களது குடும்பத்தின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதாக இல்லை என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கருத்தோட்டமாக உள்ளது.

பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்கள் உயிர் காக்க தங்கள் உயிரை இழப்பவர்களுக்கு, அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. அந்த வகையில், தங்கள் உயிரையே ஈகம் செய்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு அரசு அளித்துள்ள 25 லட்சம் ரூபாய் நிதியுதவியானது போதுமானதில்லை.

ஆகவே, தற்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை 25 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாகவும், காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் வீரர்களுக்கான நிதியுதவியை 3 லட்சத்திலிருந்து 10 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாசு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க... பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் அஞ்சலி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.