நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் கணேஷ்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்யாமல் இருந்ததை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கட்சிகளும் செய்யும் எனக் கூறுவதை எப்படி நம்ப முடியும்?
தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கை மட்டுமே உள்ளது. அவர்கள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்? பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கினார்கள். அந்தப் பணம் அனைத்தும் மதுபானதில் அவர்களுக்கே திரும்பக் கிடைத்து விட்டது.
ஒரு பெண்ணின் கனவைக் கொன்றுவிட்டு, அந்தப் பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவது எப்படி சரியாகும்? தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களைவிட மதுபான உரிமையாளர்களை மக்கள் தேர்வு செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
சீமானுக்கு வாக்களித்தால் வீணாகச் சென்றுவிடும் எனக் கூறுவதை நிறுத்துங்கள். மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று நினையுங்கள். இல்லை என்றால், எங்களையும் சுடுகாட்டில் போட்டுவிட்டு செல்லுங்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’உண்மையில் நான்தான் பிக்பாஸ்’ - சீமான் பரப்புரை