ETV Bharat / state

பணி நிரந்தரம்கோரி 10ஆவது நாளாக தொடரும் சிறப்பாசிரியர்கள் போராட்டம் - சிறப்பாசிரியர்கள் போராட்டம்

சென்னை: 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களான தங்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என 10ஆவது நாளாக போராட்டத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sedas protest will continue for the 10th day demanding the permanence of the work

author img

By

Published : Feb 7, 2021, 4:11 PM IST

சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகத்தின் அருகில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் 10ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று ஒற்றைக்காலில் நின்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநிலத் பொருளாளர் கணபதி கூறும்பொழுது, "கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்றுநர்களாக கல்வி கற்பித்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் சிறப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 1681 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றோம். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி 29ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும். மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என தொடர்பு கொள்கின்றனர். அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமும் தொடர்ந்து கல்வி கற்பித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர் நளினி கூறும்பொழுது, "அறிவு திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள் உட்பட 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்பித்து வருகிறோம். அன்றாட தேவைகளை அவர்களாகவே செய்து கொள்ள முடியாத நிலையிலும், அவற்றைச் செய்து கொள்வதற்கும் பயிற்சி அளிக்கிறோம். குழந்தைகளுக்கு அவர்களின் உறவினர்களாக அருகிலிருந்து கற்றுத் தருகிறோம்.

10ஆவது நாளாக தொடரும் சிறப்பாசிரியர்கள் போராட்டம்

மேலும் மாற்றுத் திறன் குழந்தைகளை அருகில் உள்ளவர்கள் விளையாட ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்குகிறோம். குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பின்னர் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியில் ஈடுபட்ட பொழுது எந்தவித உத்தரவும் இல்லாததால் பல்வேறு சிரமங்களை தாங்கள் அனுபவித்தோம் "எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.