சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் மஹாசாமுண்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார்(28). சி.ஐ.எஸ்.எஃப் படை வீரரான இவர், சென்னை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பில் சக காவலர்கள் மூன்று பேருடன் தங்கி சென்னை உயர் நீதிமன்ற வளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சக காவலர்கள் இருவரும் பணிக்குச் சென்றுவிட மகேந்திர குமார் மட்டும் தனியாக அறையிலிருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்து சக காவலர்கள் வீட்டிற்குத் திரும்பி பார்த்தபோது மகேந்திர குமார் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13122181_.jpg)
உடற்கூராய்விற்குப் பின் அவரது உடல் சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலரின் தற்கொலைக்கான காரணம் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் - நாக்பூரில் மீட்பு