ETV Bharat / state

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - திமுக அரசு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 4, 2023, 9:56 PM IST

சென்னை: குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக திரௌபதி முர்மு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக நாளை(ஆகஸ்ட்5) சென்னை வருகிறார். அவரை விமான நிலையத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கவுள்ளார். நாளை மாலை 6.50 மணிக்கு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, இந்திய விமானப் படையின் தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வரவுள்ள அவருக்கு அங்கிருந்து தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

வரும் 6ஆம் தேதி ஆளுநர் மாளிகை தர்பார் ஹால் என்ற பெயரில் அழைக்கப்படும் அறை பாரதியார் ஹால் என்று மாற்றப்படவுள்ள நிலையில், இந்தப் பெயர் பலகை திறப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவருக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி விருந்து அளிக்கவுள்ளதாகவும், அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், 27 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் சென்னை வருகையையொட்டி, பழைய விமான நிலையத்தில் அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சென்னை விமான நிலையம், பழைய விமான நிலையம் ஆகியவற்றில் வாகன சோதனைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் சென்னை வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சென்று தங்கவுள்ளார். தொடர்ந்து 6-ஆம் தேதி காலை கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்து ஆளுநர் மாளிகைக்குத் திரும்புகிறார். 7ஆம் தேதி காலை ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். காலை 9.55 மணிக்கு விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்கிறார்.

அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 8ஆம் தேதி மாலை 5.05 மணிக்கு விமானம் மூலம் புதுச்சேரியில் இருந்து சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசுத் தலைவருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. குடியரசுத் தலைவர் 8ஆம் தேதி மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவு நிறுத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.