சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.
பிறகு செய்தியாளரைச் சந்தித்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலாளர் ராபர்ட் கூறுகையில், ’பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை, எனவே போராட்டம் தொடரும்' என வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு, 'கூடுதல் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் எங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து முடிவை தெரிவிக்க உள்ளதாக பள்ளி கல்வி செயலாளர் தெரிவித்தார். ஆனால் அதுவரை போராட்டத்தை நாங்கள் நிறுத்தமாட்டோம் எனக் கூறிவிட்டோம்' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாஜக - திமுக கூட்டணியா? முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!