சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது முதல் மனைவி இறந்த பின், யசோதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ஆம் ஆண்டு தர்மராஜ் உயிரிழந்தார். இதையடுத்து, தனக்கும் தனது குழந்தைகளுக்கும் வாரிசு சான்று கோரி யசோதா செங்கல்பட்டு தாசில்தாரர் அலுவலத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், தாசில்தார் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். இதனை எதிர்த்து யசோதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது இந்து திருமண சட்டத்தின்படி சட்டபூர்வமான திருமணம் அல்ல.
முதல் மனைவி இறந்த பின் எனக்கு நடந்த 2ஆவது திருமணம் செல்லும் என்பதால் வாரிசு சான்று பெற எங்களுக்கு உரிமை உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மனுவுக்கு பதிலளிக்க தாசில்தார் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: திருமணமான 27 நாட்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை: நடந்தது என்ன?