அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு, இரண்டாவது சனிக்கிழமை, அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணியானது மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக அலுவலக வளாகங்களிலும், பொதுவான பகுதிகளிலும் பணியிடங்களைச் சுத்தம்செய்வதும், வழக்கமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன், வாரத்துக்கு ஆறு நாள் பணிசெய்ய வேண்டும். மே 15ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கு முடியும் வரை 33 சதவிகித பணியாளர்களை மட்டும் அனுமதிக்க கோரிக்கை!