ETV Bharat / state

வாகனத்தடுப்புகள் மீது சொகுசு கார் மோதல்; போதை தொழிலதிபருக்கு போலீஸ் வலைவீச்சு! - குடிபோதையில் வாகனத்தடுப்புகள் மீது மோதல்

சென்னை : குடிபோதையில், சொகுசு காரில் வேகமாக வந்து வாகனத் தடுப்புகள் மீது மேதிய தொழிலதிபர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய தொழிலதிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடிபோதையில் வாகனத்தடுப்புகள் மீது சொகுசு கார் மோதல்; தொழிலதிபருக்கு வலைவீச்சு

author img

By

Published : May 28, 2021, 7:44 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை முழுவதும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலை கேன்சர் மருத்துவமனை அருகே, நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தவில்லை.

இதுகுறித்து மத்திய கைலாஷ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் லோகநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. லோகநாதன் தலைமையிலான காவலர்கள் உடனடியாக வாகன தடுப்புகள் அமைத்து, அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் தடுப்புகளின் மீது காரை மோதி தப்பிக்க முயன்றுள்ளார்.

பின்னர், காரை ஓட்டிய நபரை பிடித்த காவலர்கள், அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில், பிடிபட்ட நபர் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரேஷ் டி.ஜெத்வானி (55) என்பதும், அவர் அளவுக்கதிகமான போதையில் இருப்பதும் தெரிய வந்தது. அவர் தொலைத்தொடர்பு சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யும், ஈரோ ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் என்பதும் தெரியவந்தது. தடுப்பின் மீது கார் மோதியதால், ஹரேஷ் டி.ஜெத்வானிக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர், ஹரேஷ் டி.ஜெத்வானி மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபர் ஹரேஷ் டி.ஜெத்வானி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தற்போது, தப்பியோடி தலைமறைவான தொழிலதிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு விடக்கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.