மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை நினைவு கூறும் விதமாக சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் போஸ்டரை ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, “மகாத்மா காந்தியடிகளை கொன்ற கோட்சே என்ற தேச துரோகியை நினைவு கூறும் விதமாக சென்னை முழுவதும் பல இடங்களில் ஜேஜே கட்சி சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டிய ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப், சேகர், அஜீஸ், தீபக் ஆகிய நான்கு பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற போஸ்டர் ஒட்டுவது மத வெறுப்பைத் தூண்டும் விதமாகவும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக அமைவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க... கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத ரணங்கள்! OneYearofGaja