ETV Bharat / state

புராதன சிலைகளை மீட்க டிஜிபி தலைமையில் ஆய்வுக் கூட்டம் - டிஜிபி சைலேந்திர பாபு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்ட சிலைகளை கோயில்களிடம் ஒப்படைப்பது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு வருவது குறித்தும் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புராதன சிலைகளை மீட்க டிஜிபி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

author img

By

Published : Sep 14, 2022, 6:54 AM IST

சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு ஆய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன் மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்ட கோவில் சிலைகளை அந்தந்தக் கோவில்களில் ஒப்படைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் பல சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பதுக்கப்பட்டிருக்கும் சிலைகளை மீட்க செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும் முக்கிய சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும், வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பழமை வாய்ந்த புராதன சிலைகளை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது அதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 100 சவரன் நகைகள், 5 ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணை கொடுமை; உயிரை மாய்த்த மனைவி: கணவருக்கு 10ஆண்டுகள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.