சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பியல் துறையில் தென்னிந்திய ராணுவத் துணைத் தளபதியாகப் பணியாற்றிய சுப்ரதோ மித்ரா பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்தார்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி புஷ்பிதா மித்ராவிடம் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி முனைவர் பட்டத்தை வழங்கினார்.
பயங்கரவாதம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, ”நாட்டுக்காக பணியாற்றிய ஒருவருக்கு சென்னை பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை வழங்கியதில் பெருமை கொள்கிறது.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மறைந்த ராணுவ துணை தளபதி தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கி இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படிப்பினை கற்பிக்கும் கல்லூரிகளில் இவரின் ஆய்வு குறித்த தகவல்கள் வழங்கப்படும்.
பாதுகாப்பு துறையில் வேலை
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்புத் துறை குறித்து நேரடியாக இரண்டு கல்லூரிகளில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பாதுகாப்பு துறையில் பணியில் உள்ளனர்.
எம்எஸ்சி படிப்பில் பாதுகாப்புத் துறையில் உள்ள அலுவலர்கள் நேரடியாக இரண்டு ஆண்டுகள் படிக்கின்றனர். 400-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு துறையில் படித்த சான்றிதழுடன் பணிபுரிந்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்!