கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் சரிவர நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு, புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திறக்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து, மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.