சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம், ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.75 அடியை எட்டியுள்ளது.
இதனால் வினாடிக்கு 100 கன அடி நீர், செம்பரம்பாக்கம் ஏரியின் 5 கண் மதகில் 2வது ஷட்டரில் நேற்று (நவ 2) நீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது சென்னை உள்பட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாள் இரவில் 'பிரிகாஸ்ட்' முறையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பு