ETV Bharat / state

Tambaram: பள்ளி வேன் மோதி ஆசிரியை உயிரிழப்பு; பள்ளங்கள் மூடப்படாததும் காரணமா?

தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் மகளுடன் சென்ற பள்ளி ஆசிரியை, தனியார் பள்ளி வேன் அடியில் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளி வேன் மோதி ஆசிரியை பலி
பள்ளி வேன் மோதி ஆசிரியை பலி
author img

By

Published : Jul 18, 2023, 6:13 PM IST

பள்ளி வேன் மோதி ஆசிரியை பலி

சென்னை: தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரேவதி (50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (21) உடன் இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்பகுதியில் மதனபுரம் அருகில், எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்தப் பகுதியைக் கடக்க முயற்சி செய்தபோது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்துள்ளார், இவரது மகள் தீபிகா. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் ரேவதி. அப்போது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயரில் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரேவதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற அவரது மகள் தீபிகா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி ஆட்டோ விபத்து..பள்ளி மாணவர்கள் 8 பேர் காயம்..

இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இருவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் கிடந்த மணல்கள் சரியாக அகற்றப்படாததால், வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தபோது முன்பக்க டயர் வழுக்கி கீழே விழுந்தது சிசிடிவி-யில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் இதுபோன்ற எரிவாயு குழாய் பதிப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமலும், மணல்கள் சரியாக அகற்றப்படாமலும் இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பேருந்து முன்பு பாய்ந்து பெண் பலி - மகனின் கல்லூரி கட்டணத்திற்காக விபரீத முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.