ETV Bharat / state

போலீசாரை தாக்கியதாக +2 மாணவன் கைது... பொய் வழக்கு என கண்ணீர் விடும் தாய்..!

சென்னையில் +12 முடித்த மாணவர் போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக அவரது தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

False allegation on school boy
மாணவன் மீது பொய் வழக்கு
author img

By

Published : Jun 9, 2023, 6:56 PM IST

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யனார்(34). இவர் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அய்யனார் மற்றும் தலைமைக் காவலர் கமலக்கண்ணன் ஆகிய இருவரும் கே.வி.என் புரம் இரண்டாவது தெரு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்கூட்டி வகையிலான இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்ததாக இருவரிடமும் இரு காவலர்கள் சென்று விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென இருசக்கர வாகனத்தைக் காவலர் அய்யனார் மீது தள்ளிவிட்டு இரு வாலிபர்களும் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தலைமைக் காவலர் கமலக்கண்ணனின் கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரியவருகிறது.

தலைமை காவலர் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, காவலர் மீது இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டதாக டி.பி சத்திரம் கே.வி.என் புரம் முதல் தெருவைச் சேர்ந்த அருண்குமார்(27) மற்றும் செனாய் நகரைச் சேர்ந்த மனோஜ் குமார்(18) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆபாசமாகப் பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பொது ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகிற 22ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர இருந்த தனது மகன் மனோஜ் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் சிறையில் அடைத்துவிட்டதாக மகனின் தாய் கதறி உள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனோஜை ஆறு வயது முதல் கணவனின் துணையின்றி தனியாக தனது மகனை வளர்த்து வருவதாகவும் தற்போது கல்லூரியில் சேர இருக்கின்ற நிலையில் பொய் வழக்கு போட்டு போலீசார் சிறையில் அடைத்துள்ளதால், மறுபடியும் கல்லூரி சேரும் வாய்ப்பு தனது மகனுக்கு கிடைக்காது என கண்ணீர் மல்க கூறினார்.

டி.பி சத்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சர்வ சாதாரணமாக கஞ்சா மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும், போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதற்கு காரணமான ஆட்களை கைது செய்யாமல் எதுவுமே தெரியாத இளைஞர்களை மிரட்டி பொய் வழக்குபோடுவதை டி.பி சத்திரம் காவலர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர் பால் ஜெயக்கரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதே போல மனோஜ் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த போது காவலர்கள் மனோஜிடம் கஞ்சா விற்கிறாயா என கேட்டு தாக்கியதால் வண்டியை கீழே போட்டு பயத்தில் தப்பியோடியதாகவும், இதில் காவலர் காயமடைந்த ஆத்திரத்தில் பழிவாங்க மனோஜ் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருப்பதாக வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார். குறிப்பாக காவலர்கள் குற்றம் நடந்ததற்கான அனைத்து சிசிடிவி காட்சிகளும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் காண்பிக்கவில்லை என கூறும் அவர், இது தொடர்பாக உடனடியாக சம்மந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

காவலர்களை மனோஜ் பணிசெய்யவிடாமல் ஆபாசமாக பேசியதற்கான அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் இருப்பதாக போலீசார் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூக்கில் தொங்கிய சக மாணவனைக் காப்பாற்றிய பள்ளி மாணவன்: எஸ்பி பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.