திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடிப்படை வசதிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்குவதாக அப்பகுதியை சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் தமிழ்நாடு முழுவதும் அடிப்படை வசதிகள் , அங்கீகாரம் இல்லாத 903 பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 30 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என பதில் அளித்தது.