ETV Bharat / state

சென்னை மதரஸாவில் மாணவர்கள் சித்தரவதை? பள்ளி உரிமையாளர் கைது! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாதவரத்தில் அனுமதியில்லாமல் பள்ளி நடத்தி, வடமாநில குழந்தைகளை துன்புறுத்தி அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில் பள்ளியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதரஸாவில் மாணவர்களை அடித்து உதைத்து சித்ரவதை: பள்ளி உரிமையாளர் கைது

author img

By

Published : Jan 4, 2023, 5:22 PM IST

சென்னை: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் இஸ்லாமிய மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியைப் பீகாரைச் சேர்ந்த அன்வர் மற்றும் அக்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் குழந்தைகளைப் பள்ளியில் உள்ள நிர்வாகிகள் சிலர் அடித்துத் துன்புறுத்துவதாகச் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாதவரம் போலீசாரின் உதவியோடு பள்ளிக்கு விரைந்து வந்தனர். அங்கு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளை மீட்டு, பின்னர் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பீகாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால், அந்த மாநில குழந்தைகள் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் துன்புறுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சில குழந்தைகளின் உடலில் ரத்தக்காய தழும்புகள் இருந்ததால் அவர்களை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பீகாரை சேர்ந்த அக்தர்(26) மற்றும் அப்துல்லா18 ஆகியோரை மாதவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்பு மீட்கப்பட்ட மாணவர்களை அவர்கள் சொந்த ஊரான பீகாருக்கு ரயில் மூலமாக போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான பள்ளியை நடத்தி வந்த அன்வர் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:Viral video: மது விலையை அதிகரித்து விற்கும் விற்பனையாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.