ETV Bharat / state

பள்ளி மேலாண்மை குழு சார்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்! - School Management Committee Awareness Meeting

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், பெற்றோர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
author img

By

Published : Mar 21, 2022, 2:09 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதில் பெற்றோர்கள் பங்கேற்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு, பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெற்றோர்களும் பள்ளியின் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் 15 பேர் இடம் பெற வேண்டும். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஐந்து நபர்கள் இந்த குழுவில் பங்கேற்க உள்ளனர். பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து பெற்றோர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் தங்கள் குழந்தைகளின் கல்விச் செயல்பாட்டில் தாங்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Viral Audio: விசாரணைக்கு அழைத்த காவலர்; மிரட்டல் விடுத்த ரவுடி...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.