ETV Bharat / state

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடர் குழப்பம்..! பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரின் பதில் என்ன..? - holiday announcement

confusion in school holiday announcement: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

school education secretary said school holiday announcement confusion will be resolved soon
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடர் குழப்பம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 6:49 PM IST

சென்னை: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் முதலில் முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து வந்தது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இந்த விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டது. இதனால் தற்போது மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்ததால் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பைத் தன்னிச்சையாக எடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கிறது.

இதையும் படிங்க: தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்!

பெற்றோர்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பொழிந்த போதும் விடுமுறை விடப்படவில்லை. இதனால் மாணவர்கள், மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் சென்றனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரனிடம் கேட்டபோது, ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான் எனவும் அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையை வெளுத்தெடுக்கும் மழை. .வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.