ETV Bharat / state

பள்ளி திறப்பதற்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டியவை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி ஆணை!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கு முன்பும், திறந்த பின்பும் செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

School Education Dept orders
பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : May 30, 2023, 12:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஜூன் 7 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு முன்னர்:

  • பள்ளி வளாகத்தில் புதர்கள் மற்றும் குப்பைகள் இன்றி காண்பதற்கு அழகாகவும், தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளி வளாகம் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் திறந்த வெளி கிணறுகள் இருப்பின் அதை பள்ளி திறப்பதற்கு முன்னர் மூட வேண்டும்.
  • கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறையிலோ தேவையற்ற பொருட்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாத வகையிலும், மழை நீர் வடிந்து ஓடுவதற்கு பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சரி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும், பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் இன்றி தூய்மையாக இருப்பதை உறுதி செய்வதுடன், அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் அனைத்து கழிவறைகளும் உள்ளேயும், வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு அல்லது சோப்பு கரைசல் திரவம் வைக்கப்பட வேண்டும்.
  • பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதனங்கள் மற்றும் மின் சுவிட்சுகள் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

மாணவர் சேர்க்கைக்கு பின்னர்:

  • பள்ளி திறந்த முதல் நாளே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • தொடக்கப்பள்ளி முதல் வகுப்பு சேர்க்கையை தீவிரமாக நடத்த ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதியில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்திடல் அவசியம்.
  • பள்ளி திறக்கும் நாள் அன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும். முதல் பருவத்திற்கு தேவையான நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
  • மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கப்பட வேண்டும்.
  • 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி குறித்த நேரத்திற்கு வழங்கப்படுவதை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • மாணவர்களுக்கு கல்வி இணைச் செயல்பாடுகளையும், கல்வி சார்ந்த செயல்பாடுகளையும் கற்பிக்க வேண்டும்.
  • பள்ளி மாணவர்களுக்கான நாட்காட்டி 2023 - 24 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.
  • உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்.
  • ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு 2 பாட வேலைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பாட வேளையில் விளையாட வைக்க வேண்டும்.
  • மேலும் வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை, 9 மற்றும் 10ம் வகுப்பு ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு என தனித்தனி கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
  • தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் காலை இறை வணக்கம் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்க கூட்டத்தில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
  • காலை சிற்றுண்டி அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்தில் தரமாக வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.மேலும் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை எடுக்கும் ஆசிரியர்கள் மூலமாக மாணவர்கள் சிறார் இதழ், செய்தித்தாள் பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்க செய்ய வேண்டும்.
  • வாரத்திற்கு ஒரு நாள் அனுபவ பகிர்வு அல்லது நீதி போதனை பாட வேலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேலைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநல சார்ந்த தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு முன்னர் அந்த வகுப்பில் பெற்றோர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • அப்பொழுது ஆசிரியர் பெற்றோரிடம் அவரிடம் குழந்தைகளின் வருகை, கற்றல் நிலை, உடல் நலன், மனநலம், கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் ஒவ்வொரு நாளும் வீட்டில் மாணவரின் கற்றல் சார்ந்து பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளை எடுத்து கூற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விழிப்புணர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.