ETV Bharat / state

'அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி நீட் பயிற்சி’ - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - NEET exam

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு நவம்பர் மூன்றாம் வாரம் முதல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி நீட் பயிற்சி

author img

By

Published : Nov 5, 2022, 11:38 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் பொழுது, நீட் தேர்விற்கு நேரடியாக பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டது. அதனால் நீட் தேர்வினை, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே பயிற்சி பெற்று எழுதிய மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று காலத்திலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டாலும், நேரடியாகவும் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டன. பின்னர் 2021- 22ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று குறைந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டது.

ஆனால், நீட் உள்ளிட்ட உயர் கல்விக்கான போட்டி தேர்வு எழுத விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்காமல், எலைட் வகுப்புகள் மூலம் குறிப்பிட்ட மாணவர்களுக்கு நீட்,ஜெஇஇ பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டில் நடைபெற்ற முதல் சுற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் சுமார் 100 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே அரசு பள்ளியில் படித்து நீட்டிற்காக தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய மாணவர்கள் 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டாலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பயிற்சியினை அளிக்கவில்லை. இதனால் நடப்பாண்டில் மீண்டும் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,

“போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்தில் இருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற கணக்கில் 412 பயிற்சி மையங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்த மையங்களில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பதினோராம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதர பிரிவினர் (OC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்களாகக் கொண்டு, பன்னிரண்டாம் வகுப்பில் 50 மாணவர்களும் பதினோராம் வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் அந்த மாணவர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சி மையங்களில் மாணவர்கள் வருகை பதிவேடு, மதிப்பெண் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும்.

இந்த பயிற்சியினை 2017- 18,2018-19,2019-20 கல்வி ஆண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருத்தல் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'புதிய தேசியக் கல்விக் கொள்கையால் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும்' - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.