சென்னையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறையில் துணை இயக்குநராக பணியாற்றி வரும், அனிதா சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் புகழேந்தி ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் அய்யண்ணன், அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவும், கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றிவரும் ஆறுமுகம் துணை இயக்குநராக பள்ளிக் கல்வி அலுவலகத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த மூன்று பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரமேஷ், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக வெற்றிச்செல்வி, தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக முத்து கிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி செவிலியர்கள் போராட்டம்