ETV Bharat / state

17 கோடி ரூபாய் முறைகேடு..52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்! - எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொலையில் முறைகேடு

பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக அளித்த புகாரில் 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

DVAC summons 52 college principals in tamilnad

author img

By

Published : Dec 20, 2021, 2:10 PM IST

சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் 52 கல்லூரிகள் சுமார் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக வழக்கறிஞர் அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடத்திய விசாரணையில், 10 விதமான முறையில் கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக பட்டியலிட்டது. மேனேஜ்மெண்ட் கோட்டாவில் (Management Quota) சேர்ந்த மாணவர்களுக்கான உதவித்தொகையில் 4 கோடி ரூபாயும், பெரம்பலூரில் இல்லாத கல்லூரிக்கு 58 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளதாகவும், ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பல முறை கல்வி உதவித்தொகை என பெயரில் 13 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

மோசடி

மேலும் கல்வி உதவித்தொகையை கல்லூரி பயன்பாட்டுக்காக பயன்படுத்தி 24 லட்சம் ரூபாய் முறைகேடும், ஒரே மாணவனுக்கு வெவ்வேறு அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பல முறை பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகையில் 13 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

மேலும், வேறு மாநில மாணவர்களுக்கு, மாணவர் அல்லாத நபருக்கு என வெவ்வேறு முறையில் மொத்தம் 17 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என 52 கல்லூரிகளுக்கும், நிர்வாக அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெயரிடப்படாத உயர் கல்வித்துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆஜராக உத்தரவு

இந்நிலையில் பழங்குடியின மற்றும் பட்டியலின மாணவர்களின் கல்வி உதவித்தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று(டிச.20) சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் நாளை(டிச.21) முதல் கல்லூரி முதல்வர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மேற்கூரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.