ETV Bharat / state

எஸ்பிஐ வங்கி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது! - chennai

எஸ்பிஐ வங்கி கொள்ளை வழக்கு தொடர்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கி கொள்ளை
எஸ்பிஐ வங்கி கொள்ளை
author img

By

Published : Jun 27, 2021, 6:29 PM IST

சென்னை: எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தில் நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரை கைது செய்த தனிப்படையினர், விமானம் மூலம் அவரை சென்னை அழைத்து வந்தனர்.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான காலத்தில், எஸ்பிஐ வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரத்தை (டெபாசிட் மெஷின்) மட்டும் குறிவைத்து நூதன முறையில் பணம் திருடப்பட்டது.

இதையடுத்து வங்கி அலுவலர்கள் அந்தந்த காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது.

அதனடிப்படையில், 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தியாகராய நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையர்களின் அடையாளங்களை வைத்து தேடிவந்தனர்.

அப்போது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 நபர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. தொடரந்து, ஹரியானா விரைந்த தனிப்படையினர், இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அமீர் என்பவரை ஜுன் 23 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ராயலா நகர் காவல்துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஹரியானாவைத் சேர்ந்த வீரேந்தர் என்பரை டெல்லியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் இன்று(ஜூன்.27) கைது செய்தனர்.

இதையடுத்து அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தை ஒன்பது நபர்கள் ஒருங்கிணைந்து ஒருவரின் தலைமையில் அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையில் ஈடுபட்ட அனைவரின் விவரமும் கிடைத்துள்ளதால், அவர்களை தேடும் பணியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.