திருச்சி அடுத்துள்ள மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயதுக் குழந்தை, தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தார். 30 அடி ஆழத்தில் விழுந்த அவரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சுஜித் பத்திரமாக மீட்கப்படவேண்டும் என்று பலரும் வேண்டிவருகின்றனர். அதேபோல ட்விட்டரிலும் #SaveSujith என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகிவருகிறது. மணிகண்டன் உருவாக்கியுள்ள பிரத்தியேக கருவி மூலம் மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இன்று இரவுக்குள் குழந்தை பத்திரமாக மீட்கப்படும் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.