ETV Bharat / state

'வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கப்படும்' - தேர்தல் ஆணையம்

author img

By

Published : Mar 8, 2021, 4:38 PM IST

Updated : Mar 8, 2021, 4:51 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கபடும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கையுறை
கையுறை

சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கபடும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில் இருந்த 68,324 வாக்கு பதிவு மையங்கள் தற்போது, கரோனா தொற்று காரணமாக 88,937 வாக்கு பதிவு மையங்களாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், 4 லட்சத்து 79 ஆயிரத்து 892 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண்களான 1950, 180042521950 ஆகிய எண்கனை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

'வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கப்படும்' - சத்யபிரதா சாகு

நட்சத்திர பரப்புரை

வாக்கு செலுத்த செல்வோர், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்கச் செலுத்தலாம் எனத் தெரிவித்த அவர், அரசியல் கட்சியினர் வேட்பாளருக்கு ஆதரவாக நட்சத்திரப் பரப்புரை செய்ய வருவோருக்கான அனுமதி கடிதத்தை 22ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றார். வருகின்ற 16ஆம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் 150 பேரும், 19ஆம் தேதி முதல் காவல்துறை பார்வையாளர்கள் 40 பேரும், செலவின பார்வையாளர்கள் வருகின்ற 12ஆம் தேதி முதலும் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பொன்னும் பொருளும்

ஓட்டு போட வருபவர்களுக்கு கையுறை வழங்கப்படும் - தேர்தல் ஆணையம்

23.75 கோடி ரூபாய் பணம், ரூ. 6.53 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம், 77 லட்சம் மதிப்பிலான 129 கிலோ வெள்ளி, 21.57 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் என ரூ. 32.03 மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய வாக்குப்பதிவு இயந்திரம்

இந்த தேர்தலில் எம் 3 வகை வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், 2017ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட விவிபேட் தற்போது பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்சென்றாலோ, அணிந்திருக்கும் நகைகள் தவிர பிற நகைகள் எடுத்துச் சென்றாலோ அதற்கான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கரோனா நோயாளிகள் பிபிஇ கிட்

கரோனா நோயாளிகள் PPE Kit
கரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட்

கரோனா நோயாளிகள் வாக்களிக்க பிபிஇ கிட் வழங்கப்பட்டு அவர்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத குறிப்பிட்ட அவர், வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு வாக்கு சாவடியில் கையுறை வழங்கபடுமென்றும், தேர்தல் பரப்புரை நிறைவடைந்த பிறகு சமூக வளைத்தலங்களில் பரப்புரை வீடியோவைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும, வாக்கு பதிவு நிறைவடைந்த பிறகு 3 அடுக்கு பாதுகாப்போடு வாக்கு இயந்திரங்கள் வைக்கபடும் என்றார்.

Last Updated : Mar 8, 2021, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.