ETV Bharat / state

46 வாக்கு மையங்களில் தவறு நடந்துள்ளது - சத்யபிரதா சாஹூ

சென்னை: 46 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு பதிவில் தவறு நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 8, 2019, 3:58 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைப்பெற்றன. இந்நிலையில் 46 வாக்குமையங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைப்பெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மறுவாக்குப்பதிவு நடந்தால் அதற்கு தயாராகும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஈரோடுக்கு 20 VVPAT இயந்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே செய்யப்பட்டுள்ளது.

ஒப்பனை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்கு முன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளது. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். இந்த மையங்களில் மறுவாக்குப்பதிவு நடக்குமா என்பது குறித்து தற்போது கூறமுடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமே பரிசீலித்து, மறுவாக்குப்பதிவு நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும். தேர்தல் நன்னடத்தை விதிப்படி இதுவரை 156 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 114 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 42 கோடி மீதமுள்ளது. இதுவரை 2243 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்* 

தேனிக்கு 50 EVM இயந்திரங்களும்  ஈரோடுக்கு 20 VVPAT இயந்திரங்களும் மறுவாக்குப்பதிவு நடந்தால் அதற்கு தயாராகும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

இது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே செய்யப்பட்ட வழக்கமான செயல்தான்.

இந்திய தேர்தல ஆணையம் மறுவாக்குபதிவு நடத்துவது தொடர்பான முழு விபரத்தை கேட்டுள்ளது.

ஒப்பனை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்கு முன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளது. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அளித்துள்ளோம்.

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். மற்றபடி தற்போது தவறு நடந்துள்ள 46 வாக்குச்சாவடிகள் அடங்கிய 13 மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு நடக்குமா என்பது குறித்து தற்போது கூறமுடியாது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையமே பரிசீலித்து, மறுவாக்குப்பதிவு நடத்துவதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும்.

தற்போதுள்ள நிலவரப்படி தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றாக்குறை உள்ளது. ( EVM - 0, CU - 72, VVPAT -57) மேலும், ஈரோடில் விவிபாட் பற்றாக்குறை உள்ளது.(EVM - 54, CU - 37, VVPAT - 0) இதனடிப்படையிலேயே முன்னெச்சரிக்கையாக இரண்டு மாவட்டங்களுக்கும் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

நேற்று பறிமுதல் செய்யப்பட்ட பணம் - 9,16,000

துவக்கம் முதல் இதுவரை 156 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 114 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 42 கோடி மீதமுள்ளது.

இதுவரை 2243 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது (638 கோடி மதிப்பு). அதில் 2226 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது (632 கோடி).

18 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள பிற உலோகங்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 14 கோடி 19 லட்சம் இன்னும் தங்களிடம் மீதமுள்ளது, 4 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.