ETV Bharat / state

தொடரும் வருமானவரித்துறை ரெய்டுகள்... மீண்டும் ஆட்டம் காணும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை! - Sasikala

சசிகலாவின் பையனூர் பங்களா இன்று வருமானவரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என 2,000 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இவை பினாமி சொத்துக்கள் என்பது வருமான வரித்துறை விசாரணையில் உறுதியானால் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா
சசிகலா
author img

By

Published : Sep 8, 2021, 7:07 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவில் பையனூர் பங்களா உள்ளிட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் இன்று (செப்.08) முடக்கியுள்ளனர்.

சிறை தண்டனையை அடுத்து தொடரும் ஐடி ரெய்டுகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு மீதமுள்ள மூவரும் நான்காண்டு சிறைத் தண்டனையை முடித்து வெளியே வந்தனர்.

இச்சூழலில் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ச்சியாக, 2017ஆம் ஆண்டு சசிகலா, அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடு என 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

சசிகலா
சசிகலா

இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் நான்காயிரத்து 430 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதையும் அலுவலர்கள் கண்டுபிடித்தனர். அதுமட்டுமல்லாமல் சுமார் 4,500 கோடி ரூபாய் கணக்கில் வராத சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாமி பரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிவு

இதில் பினாமி பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வருமான வரித் துறையினர் கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.

அதற்கடுத்தபடியாக 300 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 65க்கும் மேற்பட்ட கணக்கில் வராத சொத்துக்களை கண்டுபிடித்து வருமான வரித் துறையினர் கடந்த ஆண்டு அவற்றை முடக்கினர். இதில் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகிலேயே சசிகலா கட்டி வரும் புதிய பங்களா சொத்தையும் வருமானவரித் துறையினர் முடக்கினர்.

முடக்கப்பட்ட பையனூர் பங்களா

அதற்கடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என 2,000 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது திருப்போரூர் தாலுகாவில் உள்ள பையனூர் பங்களா,அதைச் சுற்றியுள்ள நிலம் என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நாற்பத்தி ஒன்பது ஏக்கரில் உள்ள 12 விதமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

இதில் இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் 22 ஏக்கர் சொத்தை சசிகலா மிரட்டி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் மட்டுமில்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் உள்ளிட்ட பலரிடமும் சேர்ந்து 112 ஏக்கர் அளவில் சொத்துக்களை அபகரித்ததாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில் ஒரு பகுதியான நாற்பத்தி ஒன்பது ஏக்கர் நிலத்தை தான் வருமான வரித்துறையினர் தற்போது முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கான நோட்டீஸைம் வருமான வரித்துறையினர் பங்களாவில் ஒட்டிச் சென்றுள்ளனர்.

அந்த நோட்டீஸில் பினாமி பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நோட்டீஸ் ஒட்டிய மூன்று மாதங்களுக்குள் இந்த சொத்துக்கள் தொடர்பாக நேரடியாக ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீபா, தீபக்கிற்கும் நோட்டீஸ்

குறிப்பாக சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அவரது உடன்பிறந்த சகோதரி தீபா ஆகியோருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உத்தரவு பெற்றுள்ள காரணத்தினால் இந்த நோட்டீஸ் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தச் சொத்துக்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த நோட்டீஸ் தொடர்பான நகல் அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்று இன்னும் பினாமி சொத்துகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பினாமி சொத்தென உறுதியானால் 7 ஆண்டு சிறை...

இந்த நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக உரிய பதில் அளிக்காவிட்டாலும், வருமான வரித்துறை விசாரணையில் பினாமி சொத்துக்கள் என்பது உறுதியானால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், பினாமியாக சேர்த்த சொத்தின் மதிப்பில் 25 விழுக்காடு அபராதமாகவும் செலுத்தப்பட வேண்டும் என வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை முடிந்து மீண்டும் அரசியலுக்குள் நுழைய திட்டமிட்டிருந்த சசிகலாவுக்கு இது மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.