ETV Bharat / state

‘ஊரடங்கு முடிந்ததும் தொண்டர்களைச் சந்திப்பேன்’- சசிகலா ஆடியோ வெளியீடு! - admk volunteer

சென்னை: ஊரடங்கு முடிந்த பின்னர் தொண்டர்களை நிச்சம் சந்திப்பேன் என முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆடியோ வெளியீடு
சசிகலா ஆடியோ வெளியீடு
author img

By

Published : Jun 16, 2021, 10:52 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சிக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கட்சியினை மீண்டும் கைப்பற்ற சசிகலா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வளம் வருகிறது. இது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது அவர் சென்னை, மதுரை, நெல்லை, உளுந்தூர்பேட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் தொண்டர்கள் பலரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கட்சியை மோசமாக நிர்வாகம் செய்து வருவதாகவும், தொண்டர்களின் கருத்துகளுக்கோ, கட்சியின் பாரம்பரியத்துக்கோ மதிப்பளிக்காமல் சுயநலத்தை முன்வைத்தே செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

"இவர்களை விடக்கூடாது. இவர்களின் அக்கிரமத்துக்கு நீங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுப்பிலிருந்து நீக்கி அவமானப்படுத்துகிறார்கள். அதிமுக ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் கட்சியின் பொதுச் செயலாளர். 2022ஆம் ஆண்டில் நீங்கள் தான் முதலமைச்சர்" என உணர்ச்சிப் பொங்க பேசினர். நீங்கள் மீண்டும் கட்சி பொதுச் செயலாளராக வர வேண்டும் எனத் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சசிகலா செல்போன் ஆடியோ

தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டு பேசினாலும் சசிகலா நிதானத்துடனே பேசினார். "அதிமுக தமிழ்நாட்டில் இருக்கும் வரையில் எம்ஜிஆர் போட்ட தீர்மானத்தை மாற்ற முடியாது. தொண்டர்களால்தான் கட்சி இருக்கிறது. மீண்டும் நான் பொறுப்பேற்றதும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தொண்டர்களை கண்ணீர் சிந்தவிடமாட்டேன்.

நான் மீண்டும் பொறுப்புக்கு வந்ததும், ஜெயலலிதா நடந்துகொண்டதைப் போலவே இருப்பேன். ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும், தொண்டர்களைக் காப்பாற்ற வேண்டும். அனைத்து தொண்டர்களும் எனக்கு ஆதாரவாய் இருப்பதாய் கூறுகிறார்கள். கவலைப்படாமல் இருங்கள் நான் வருகிறேன். இவர்கள் செய்வதை இனிமேலும் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

சசிகலா செல்போன் ஆடியோ

கட்சி செல்லும் நிலையைப் பார்த்தும் ஏதும் செய்யாமல் இருக்க முடியவில்லை. கட்சியை வளர்த்து, ஆட்சியை நிர்வாகித்து, மக்களுக்கு நன்மை செய்துவிட்டு தற்போது இந்த நிலையைப் பார்க்க முடியவில்லை. அதிமுக உறுப்பினர் பொறுப்பிலிருந்து புகழேந்தியை நீக்கியது சரியல்ல. கட்சிக்காக ஒருவர் கூட பேசக்கூடாதா எபிஎஸ் ஓபிஸ் கட்சி நலனைப் பார்ப்பதில்லை. தனிநபர் நலனுக்கு ஏற்ப செயல்படுவதைப் போல் உள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்ததும் கண்டிப்பாக தொண்டர்களைச் சந்திப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் ஆக்கி இருப்பேன் - சசிகலா ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.