சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எனக்கு தெரியாது. இதன் பிண்ணனி என்ன என்று தெரியாததால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டில் எதுவும் பண்ண முடியாது. சினிமா படங்கள் வெளிவர உள்ளதால் அதனை விளம்பரப்படுத்துவதற்காக ஏதாவது செய்து இருக்கலாம். வருவேன் வருவேன் என்று ரஜினி பல ஆண்டுகளாக கூறிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் கடைசியில் எதுவும் நடக்கவில்லை. சினிமா டயலாக் கேட்டு அலுத்து போய்விட்டது.
சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. இன்னும் ஒன்றரை வருடத்திற்குள் எல்லாம் முடிந்துவிடும்.
மேலும் கட்சியை நல்ல நிர்வாகத்துடன் நடத்தக்கூடிய திறமை கொண்டவர் சசிகலா. சசிகலா வெளியே வந்தால் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என்றார்.
இதையும் படிங்க:காந்தி படுகொலை குறித்து சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!