ETV Bharat / state

அதிமுக விதிகளில் திடீர் மாற்றம்; செக்மேட் யாருக்கு? - அதிமுக பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அடிப்படை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

admk
author img

By

Published : Nov 24, 2019, 9:28 PM IST

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் பிரதான அணிகளாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் அடிப்படை சட்ட விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகாலம் இருப்பவரே அமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என இருந்த அடிப்படை விதியில், போட்டியிடுபவர் தேர்தலில் நிற்பதற்கு முன்பு தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு அதிமுகவின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 5 ஆண்டு இருப்பவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குக் கூட போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கூட அதிமுகவில் இணைந்து தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாத வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் சசிகலாவுக்கு நோ என்ட்ரி
அதிமுகவில் சசிகலாவுக்கு நோ என்ட்ரி

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக நியமித்துச் செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எடப்பாடி - ஓபிஎஸ் இணைந்த பிறகு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் சசிகலாவின் நியமனம் செல்லாது, பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது.

அதிமுகவில் இணைவாரா சசிகலா
அதிமுகவில் இணைவாரா சசிகலா

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து நன்னடத்தை காரணமாக சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு வெளியே வரும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும் கட்சித் தலைமை இதுவரை எதுவும் கூறவில்லை. அடிப்படை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒருசிலரை ஓரம்கட்டுவதற்காகதான் என கட்சியில் பரவலாக பேசப்பட்டுவருகிறது. எனவே, இன்று நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கட்சி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பயமில்லை - முதலமைச்சர் பழனிசாமி

Intro:Body:சென்னை // வி. டி. விஜய்// சிறப்பு செய்தி

சசிகலாவுக்கு 'நோ என்ட்ரி'

'சைலன்ட்டாக' சட்ட திருத்தம்

சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்பதற்காக அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. இதில் முதல்வர், துணை முதல்வர், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஆயிரக் கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 23 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

தொடர்ச்சியாக அதிமுகவின் கலைப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் தொழிநுட்ப அணி ஆகியவை அமைப்பு சாரா அணிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் இந்த அணிகள் பிரதான அணிகளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் அடிப்படை சட்ட விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகாலம் இருப்பவரே அமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என இருந்த அடிப்படை விதிகளில், போட்டியிடுபவர் தேர்தலில் நிற்க உள்ள தேதிக்கு முன்பு தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு அவர் அதிமுகவின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆண்டு இருப்பவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கூட போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் கூட அதிமுகவில் இணைந்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாத வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக நியமித்து செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். எடப்பாடி - ஓபிஎஸ் இணைவுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் சசிகலாவின் நியமனம் செல்லாது, பொது செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து நன்னடத்தை காரணமாக சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனா அடுத்த ஆண்டு அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்படுகிறது. அவ்வாறு வெளியே வரும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து பல்வேறு கருது நிலவி வந்தாலும் கட்சி தலைமை இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில், சசிகலா அப்படியே கட்சியில் இணைந்தாலும் கூட அதிமுக அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வர முடியாதபடி இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.