சென்னை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்போது, "சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது, பாஜக ஆட்சி அமைந்துள்ளது. சிவசேனா முதலாவதாக தேசியவாத காங்கிரஸை நாடிச் சென்றது தவறு. பாஜக தேசிய வாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததை நான் வரவேற்கிறேன்" என்றார்.
2021ல் மக்கள் அதிசயத்தை நிகழ்தத்வார்கள் என்று ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு, "நான் மிகச்சிறந்த ஜோதிடர் இல்லை. நாளை என்ன நடக்கும் என்று கூறுவதற்கு இது குறித்து நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. இவ்வளவு நாள் அரசியலில் இல்லாமல் தற்போது ரஜினி, கமல் அரசியல் பேசுவதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.
தென்காசி தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நான் பலமுறை சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். தற்போது,தென்காசியை தனிமாவட்டமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எனது பெயரை குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உள்ளாட்சித்தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது ஏற்கனவே நடந்த ஒன்று தான். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைமுகத்தேர்தல் மூலம் வெற்றி பெற்று வந்தவர் தான்" என்றார்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! விழுப்புரத்தில் பதட்டம்!