ETV Bharat / state

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உயிரைவிட்ட சங்கரலிங்கனாரின் நினைவு தினம்

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதை வலியுறித்து உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த சங்கரலிங்க நாடாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Sankaralinganar Memorial Day
Sankaralinganar Memorial Day
author img

By

Published : Oct 13, 2020, 12:02 PM IST

Updated : Oct 13, 2020, 12:41 PM IST

தமிழ்நாட்டிற்கு முன்பு மெட்ராஸ் மாகாணம் என்றே பெயர் இருந்தது. 1950களில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்தினர்.

அப்போது இதனை வலியுறுத்தி அரசியல் சாராத தமிழ் ஆர்வலராக சங்கரலிங்க நாடார், 1956ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விருதுநகரில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம். தோழர் ஜீவானந்தம் உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச்சொல்லி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவதாகக்கூறி சுமார் 76 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்க்கு பின், 1956ஆம் ஆண்டு ஆக்டோபர் 13ஆம் தேதி அவர் காலமானார்.

அதைத்தொடர்ந்து 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக வெற்றிபெற்ற ஆட்சியமைத்தது. அதன் பின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்குப் பின் 1968ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், தமிழ்நாடு முழுக்க பெயர் மாற்றம் விழாக்கள் கொண்டாடப்பட்டபோது சங்கரலிங்கனாருக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு!

Last Updated : Oct 13, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.