ETV Bharat / state

பட்டாசு கடைக்குச் சீல் வைப்பு - அதனை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை - chennai high court

விழுப்புரத்தில் சீல் வைத்த பட்டாசு கடையை, மீண்டும் திறக்கக்கோரி பட்டாசுக்கடை உரிமையாளர் நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பட்டாசு கடை  வெடி விபத்து  சென்னை உயர் நீதி மன்றம்  உயர் நீதி மன்றம்  பட்டாசு கடைக்கு சீல்  fire cracker  fire cracker accident  cracker shop seal  chennai high court  high court
சென்னை உயர் நீதி மன்றம்
author img

By

Published : Nov 2, 2021, 5:05 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், சாலை அகரம் என்ற ஊரில், நித்யா என்பவரின் பட்டாசு கடையில், வெடிபொருள் துணை கட்டுப்பாட்டாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அக்கட்டடத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி, பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாகக்கூறி, பட்டாசு கடைக்கு, கடந்த அக்டோபர் 28இல் சீல் வைக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றி கடையை நடத்த அனுமதிக்கக் கோரி பட்டாசுக் கடை உரிமையாளர் நித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, உரிமம் பெற்று அனைத்தும் இயல்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் விதிமீறல் இருப்பதாகக் கூறி, கடைக்கு சீல் வைத்திருப்பதாகவும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில நாட்கள் மட்டுமே நடத்தக்கூடிய வியாபாரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம்

தமிழ்நாடு அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரு தளங்களில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டதாலும் சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், பட்டாசு கடைகளில் வெடி பொருட்களை முறையாக கையாளாமல் அலட்சியமாக இருப்பதே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வெடிவிபத்து போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி மகாதேவன், இன்று (நவ.2) மதியத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பட்டாசு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு மூன்று நாட்களே உள்ளதைக் கருத்தில் கொண்டு வட்டாட்சியர் இன்று (நவ.2) மாலை ஆய்வு மேற்கொண்டு, பட்டாசு கடையை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.